/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
எஸ்.டி.பி.ஐ., மாவட்ட பொதுக்குழு கூட்டம்
/
எஸ்.டி.பி.ஐ., மாவட்ட பொதுக்குழு கூட்டம்
ADDED : ஜன 18, 2025 01:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எஸ்.டி.பி.ஐ., மாவட்ட பொதுக்குழு கூட்டம்
ஈரோடு, : ஈரோட்டில், எஸ்.டி.பி.ஐ., கட்சி தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம், 2025-2027ம் ஆண்டுக்கான புதிய மாவட்ட நிர்வாகி கள் தேர்வும் நடந்தது. மாவட்ட தலைவர் ஜமால்தீன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் பர்ஹான் அஹமது வரவேற்றார். கோவை மண்டல செயலாளர் முகம்மது லுக்மானுல் ஹக்கீம், தொழிற்சங்க மாநில பொருளாளர் ஹசன்பாபு முன்னிலை வகித்தனர். அடுத்த மூன்றாண்டுக்கு ஈரோடு தெற்கு மாவட்ட தலைவராக அப்துல்ரஹ்மான், பொது செயலாளர் சாகுல் அமீது, மாவட்ட துணை தலைவர் குறிஞ்சி பாஷா, மாவட்ட செயலாளர் முனாப், மாவட்ட பொருளாளர் முகம்மது ஜாபீர் உட்பட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.