/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அந்தியூரில் ஏ.டி.எம்.,மைஉடைத்த பெரிசுக்கு வலை
/
அந்தியூரில் ஏ.டி.எம்.,மைஉடைத்த பெரிசுக்கு வலை
ADDED : ஜன 19, 2025 01:41 AM
அந்தியூரில் ஏ.டி.எம்.,மைஉடைத்த பெரிசுக்கு வலை
அந்தியூர்,:அந்தியூர், தவிட்டுப்பாளையம் மார்க்கெட் பஸ் நிறுத்தம் அருகில், சவுத் இன்டியன் தனியார் வங்கியின் ஏ.டி.எம்., மையம் உள்ளது. கடந்த, 15ம் தேதி இயந்திரத்தின் டிஸ்பிளே உடைந்திருந்தது. இதுகுறித்து அந்தியூர் போலீசில், வங்கி தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. போலீசார் ஆய்வில் கற்களால் டிஸ்பிளே உடைக்கப்பட்டு, பெட்ரோல் ஊற்றப்பட்டதும், பணம் திருட்டு போகாததும் தெரிய வந்தது. இதை தொடர்ந்து கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில், 60 வயது மதிக்கத்தக்க ஆசாமி, ஒரு தண்ணீர் பாட்டிலுடன் மையத்துக்குள் சென்று திரும்பியது பதிவாகி இருந்தது. இதன் அடிப்படையில் ஆசாமியை தேடி வருவதாக, போலீசார் தெரிவித்தனர்.

