ADDED : ஜன 19, 2025 01:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மனைவி மாயம்; கணவன் புகார்
அந்தியூர்:அந்தியூர் அருகே கீழ்வாணி, மூங்கில்பட்டியை சேர்ந்தவர் மகேந்திரன், 37; தொழிலாளியான இவரின் மனைவி சாரதா, 36; தம்பதிக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இரு தினங்களுக்கு முன், கேத்தநாயக்கனுாரில் உள்ள மாமனார் வீட்டில், மனைவி மற்றும் குழந்தைகளை விட்டு சென்றார். அன்றிரவு சாரதா மாயமாகியுள்ளார். சாரதாவின் பெற்றோர் தேடியும் கிடைக்கவில்லை. மகேந்திரன் புகாரின்படி ஆப்பக்கூடல் போலீசார், சாரதாவை தேடி வருகின்றனர்.

