/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பெண்ணிடம் அத்துமீறல்மிரட்டி தப்பியவர் கைது
/
பெண்ணிடம் அத்துமீறல்மிரட்டி தப்பியவர் கைது
ADDED : ஜன 22, 2025 01:27 AM
பெண்ணிடம் அத்துமீறல்மிரட்டி தப்பியவர் கைது
டி.என்.பாளையம்:டி.என்.பாளையத்தை அடுத்த டி.ஜி.புதுார் அருகே, காளியூர் இந்திரா குடியிருப்பு பகுதியை சேர்ந்த செந்தில்குமார் மனைவி ஆடிவெள்ளி, 33; விவசாய கூலி தொழிலாளி.
அதே பகுதியில் ஒரு மல்லிகை தோட்டத்தில் பூப்பறிக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தார். அதே பகுதியை சேர்ந்த ராமசாமி, 22;, ஆடிவெள்ளியின் கையை பிடித்து இழுத்து தவறாக நடக்க முயன்றுள்ளார். அவர் சத்தமிடவே, கொலை மிரட்டல் விடுத்து தப்பி ஓடியுள்ளார். செந்தில்குமார் புகாரின்படி பங்களாப்புதுார் போலீசார், ராமசாமியை தேடி வந்தனர். நேற்று அவரை கைது செய்த போலீசார், கோபி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மாவட்ட சிறையில் அடைத்தனர்.