ADDED : ஜன 30, 2025 01:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஜம்பையில் மக்கள் மறியல் போராட்டம்
பவானி :பவானி அருகே உள்ள ஜம்பையில், வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது, நேற்று காலை, ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு பொதுமக்கள் சிகிச்சைக்காக
சென்றனர். பணியிலிருந்த டாக்டர் தாமதமாக வந்துள்ளார். இதையடுத்து, கூடியிருந்த பொதுமக்கள், பவானி - -சத்தியமங்கலம் சாலையில், வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன் சாலை மறியலில் ஈடுபட்டனர், பவானி போலீசார் மற்றும் மருத்துவ அலுவலர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். டாக்டர் பற்றாக்குறையை போக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.