/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'சவுண்டு' விட்ட திருப்பூர் எம்.பி.,
/
'சவுண்டு' விட்ட திருப்பூர் எம்.பி.,
ADDED : ஜன 31, 2025 01:26 AM
'சவுண்டு' விட்ட திருப்பூர் எம்.பி.,
கொங்கர்பாளையம் கிராம மக்கள், கோபி தாலுகா அலுவலகத்தில், இரண்டாவது நாளாக நேற்றும் போராட்டத்தை தொடர்ந்த நிலையில், போலீசார் குவிக்கப்பட்டனர். தகவலறிந்த திருப்பூர் எம்.பி., சுப்பராயன், போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை மதியம் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து, தனிப்பட்ட நபர் ஆதாயத்துக்காக, குழாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்வது, மக்களின் நீராதாரத்துக்கு ஆபத்து ஏற்படும். இத்திட்டத்தை தடை செய்ய, ஏற்கனவே முறையீடு செய்து தடுத்துள்ளோம். உயர்நீதிமன்றம் என்ன நிபந்தனைகளின்படி, குழாய் அமைக்க கூறியுள்ளதோ, அதன்படிதான் அமைக்க வேண்டும். ஆனால் நீதிமன்ற உத்தரவை மீறி செயல்படுகிறார்கள். இது நீதிமன்ற அவமதிப்பாகும். தவறான முறையில் தண்ணீர் கொண்டு செல்வதை தடுக்க வேண்டும். இதுகுறித்து ஆதாரத்துடன் ஈரோடு கலெக்டரை சந்தித்து வலியுறுத்தியுள்ளோம். இவ்வாறு கூறினார். பிறகு ஆதரவாளர்களுடன் காரில் ஏறி சென்றார்.

