/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காங்கேயம், தாராபுரத்தில் இ.முன்னணி ஆர்ப்பாட்டம்
/
காங்கேயம், தாராபுரத்தில் இ.முன்னணி ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 05, 2025 01:17 AM
காங்கேயம், தாராபுரத்தில் இ.முன்னணி ஆர்ப்பாட்டம்
காங்கேயம் :திருப்பரங்குன்றம் முருகன் கோவில் விவகாரத்தில், இந்து அமைப்பு மற்றும் அதன் ஆதரவு அமைப்புகளுக்கு ஆதரவு தெரிவிக்க, காங்கேயம் இந்து முன்னணி இயக்கத்தினர் நேற்று காலை,காங்கேயம் பகுதியில் இருந்து கிளம்பினர். காங்கேயம் போலீசார், 15 பேரை கைது செய்தனர்.
* திருப்பரங்குன்றத்தில் இந்து முன்னணி நடத்தவிருந்த போராட்டத்துக்கு, போலீசார் தடை விதித்ததை கண்டித்து, தாராபுரம் பழைய நகராட்சி அலுவலகம் அருகே, இந்து முன்னணி கோட்ட செயலாளர் கோவிந்தராஜ் தலைமையில், நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் கதிரேசன், பாலு, சங்கிலித்துரை உள்பட நுாற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.