/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மறியலில் ஈடுபட்டஹிந்து முன்னணியினர் கைது
/
மறியலில் ஈடுபட்டஹிந்து முன்னணியினர் கைது
ADDED : பிப் 05, 2025 01:21 AM
மறியலில் ஈடுபட்டஹிந்து முன்னணியினர் கைது
ஈரோடு :மதுரை, திருப்பரங்குன்றம் மலையின் புனிதத்தை காக்க வலியுறுத்தி, ஹிந்து முன்னணி சார்பில், நேற்று அறவழி போராட்டம் நடத்த அழைப்பு விடப்பட்டிருந்தது. இதற்கு அனுமதி மறுத்து, தமிழக அரசு தடை விதித்தது. இதை கண்டித்து ஹிந்து முன்னணி சார்பில் ஈரோட்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் ஜெகதீசன் தலைமை வகித்தார். மாவட்ட பொது செயலாளர் கார்த்தி முன்னிலை வகித்தார். ஹிந்து அன்னையர் முன்னணி பொறுப்பாளர்கள் ஜெயமணி, பூர்ணிமா உள்ளிட்டோர் பங்கேற்றனர். போலீஸ் அனுமதி மறுத்த நிலையில், ஆர்ப்பாட்டம் செய்த ஒன்பது பெண்கள் உள்ளிட்ட, 71 பேரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் தமிழக அரசை கண்டித்து, கோபி பஸ் ஸ்டாண்டில், மேற்கு மாவட்ட துணைத்தலைவர் கிருஷ்ணசாமி தலைமையில், ௫௦க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.