sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ காலிங்கராயன் பாசனத்தில் உழவுப்பணி தீவிரம்

காலிங்கராயன் பாசனத்தில் உழவுப்பணி தீவிரம்

காலிங்கராயன் பாசனத்தில் உழவுப்பணி தீவிரம்


ADDED : பிப் 09, 2025 01:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 09, 2025 01:10 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

காலிங்கராயன் பாசனத்தில் உழவுப்பணி தீவிரம்

ஈரோடு: ஈரோடு காலிங்கராயன் பாசனப் பகுதியில், இறுதிக்கட்ட உழவுப்பணி தீவிரமாக நடந்து வருகிறது.

காலிங்கராயன் பாசனத்துக்கு ஜன.,௧ம் தேதி முதல் நீர் வினியோகிக்கப்படுகிறது. இப்பாசனத்துக்கு உட்பட்டு பண பயிர்களான கரும்பு, வாழை, மஞ்சள் மட்டுமின்றி நெல்லும் குறிப்பிட்ட பகுதியில் பயிரிடப்படுகிறது. காலிங்கராயன்பாளையம், வைரபாளையம், பி.பெ.அக்ரஹாரம், கருங்கல்பாளையம், வெண்டிபாளையம் பகுதியில் இரண்டாம் பருவ சாகுபடிக்கான நாற்று நடவு பணி நடந்து வருகிறது. சில இடங்களில் இறுதிக்கட்ட உழவுப்பணி தீவிரமடைந்துள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: இப்பாசன பகுதிகளில் இறுதிக்கட்ட உழவுப்பணி நடக்கிறது. பெரும்பாலும் நாற்று நடவு நிறைவு பெற்றுள்ளது. தொழிலாளர்கள் போதிய அளவில் கிடைக்காததால், உழவுப்பணி தாமதமானது. இதனால் சேலம், நாமக்கல் உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்து தொழிலாளர்கள் அழைத்து வரப்படுகின்றனர். குறுகிய காலத்தில் பயன் தரும் நெல் ரகங்களை விவசாயிகள் நடவு செய்கின்றனர். இவ்வாறு கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us