ADDED : பிப் 09, 2025 01:25 AM
சிறுதானியம் குறித்து சிறப்பு விழா
காங்கேயம்:வேளாண்மை- உழவர் நலத்துறை சார்பில், தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கத்தின் கீழ், திருப்பீர் மாவட்ட அளவிலான சிறுதானிய சிறப்பு திருவிழா காங்கேயத்தில் நேற்று நடந்தது. தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் கயல்விழி துவக்கி வைத்து பார்வையிட்டனர். ஈரோடு எம்.பி., பிரகாஷ் முன்னிலை வகித்தார்.
தென்னையில் பூச்சி, நோய் கட்டுப்பாடு, தென்னங்கன்று நடவு முறை, ஊடுபயிர் சாகுபடி, நீர் மற்றும் உர மேலாண்மை முறை குறித்த கையேடு மற்றும் சிறுதானிய கையேடுகள் வழங்கப்பட்டது.
முதல்வரின் மன்னுயிர் காப்போம் திட்டத்தில் -ஆடா தொடா நொச்சி நாற்று, கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் பேட்டரி தெளிப்பான் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில், பயனாளிகளுக்கு வேளாண் உபகரணங்களை அமைச்சர் வழங்கினார்.

