ADDED : பிப் 13, 2025 01:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தவறி விழுந்து கண்டக்டர் சாவு
பவானி:பவானி அருகே, ஒலகடம் அம்மன் கோவில் தோட்டத்தை சேர்ந்தவர் கார்த்தி, 41; ஈரோடு அரசு போக்குவரத்து பணிமனையில், தற்காலிக கண்டக்டராக பணிபுரிந்தார். நேற்று முன்தினம், ஈரோடு-பவானி வழித்தடத்தில் சென்று வரும், 5-ம் நம்பர் டவுன் பஸ்ஸில் டியூட்டியில் இருந்தார். காலிங்கராயன்பாளையம் வளைவில் திரும்பிய
போது, படியில் நின்று கொண்டிருந்த கார்த்தி தவறி விழுந்தார். பலத்த காயமடைந்த அவரை, தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று இறந்தார்.

