/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோர்உதவித்தொகை பெற அழைப்பு
/
மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோர்உதவித்தொகை பெற அழைப்பு
மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோர்உதவித்தொகை பெற அழைப்பு
மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோர்உதவித்தொகை பெற அழைப்பு
ADDED : பிப் 13, 2025 01:44 AM
மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோர்உதவித்தொகை பெற அழைப்பு
ஈரோடு:வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சார்பில், படித்த வேலைவாய்ப்பற்றோருக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் தமிழகத்தில் செயல்படுகிறது.
இதன்படி, 10ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம், 200 ரூபாய், தேர்ச்சி பெற்றவர்களுக்கு, 300 ரூபாய், மேல்நிலை கல்வி தேர்ச்சி பெற்றவர்களுக்கு, 400 ரூபாய், பட்டதாரிகளுக்கு, 600 ரூபாய் வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளில் 10ம் வகுப்பு படித்தோருக்கு, 600 ரூபாய், மேல்நிலை தேர்ச்சிக்கு, 750 ரூபாய் பட்டதாரிகளுக்கு, 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், நேரில் சென்று பதிவு செய்து பயன் பெறலாம். வேலைவாய்ப்பு பதிவு செய்து, 5 ஆண்டுக்கு மேலாக பதிவை தொடர்வோர், மாற்றுத்திறனாளியாக இருந்தால், 1 ஆண்டு முடிந்ததும் பயன் பெறலாம். வயது, வருவாய் விதிமுறைகளுக்கு உட்பட்டு விண்ணப்பிக்கலாம்.பொறியியல், மருத்துவம், விவசாயம், கால்நடை அறிவியல் போன்ற தொழில் நுட்ப பட்டம் பெற்றோர் தகுதியற்றவர்கள். விண்ணப்பத்தை, https://tnvelaivaaippu.gov.inல் பதிவு செய்யலாம். கூடுதல் விபரத்துக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகலாம்.