/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
புளியம்பட்டியில் வீட்டில்ரேஷன் அரிசி பறிமுதல்
/
புளியம்பட்டியில் வீட்டில்ரேஷன் அரிசி பறிமுதல்
ADDED : பிப் 14, 2025 01:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புளியம்பட்டியில் வீட்டில்ரேஷன் அரிசி பறிமுதல்
ஈரோடு, :ஈரோடு மாவட்ட குடிமை பொருட்கள் கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு பிரிவு போலீசார், புளியம்பட்டி நேரு நகரில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது யமஹா பேசினோ பைக்கில் மூட்டையுடன் வந்த புளியம்பட்டியை சேர்ந்த பிரபாகரனை, 47, நிறுத்தி சோதனை செய்தனர். மூட்டையில் ரேஷன் அரிசி இருந்தது. விசாரணையில் இட்லி மாவு அரைத்து விற்பனை செய்து வருவதாகவும், அதற்காக மக்களிடம் இருந்து ரேஷன் அரிசி வாங்கி சென்றதும் தெரிந்தது. இதற்காக அவரது வீட்டில் அருகே பதுக்கி வைத்திருந்த, 1,030 கிலோ ரேஷன் அரிசி மற்றும் டூவீலரை பறிமுதல் செய்து, பிரபாகரனை கைது செய்தனர்.