/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஒருங்கிணைந்து மா.செ.,க்கள்செயல்படுவோம்; அமைச்சர்
/
ஒருங்கிணைந்து மா.செ.,க்கள்செயல்படுவோம்; அமைச்சர்
ADDED : பிப் 18, 2025 01:17 AM
ஒருங்கிணைந்து மா.செ.,க்கள்செயல்படுவோம்; அமைச்சர்
பெருந்துறை,ஈரோடு மத்திய மாவட்ட தி.மு.க., பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள தோப்பு வெங்கடாச்சலம், அமைச்சர் முத்துசாமி தலைமையில், பெருந்துறையிலுள்ள அண்ணாதுரை சிலைக்கு நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அப்போது அமைச்சர் முத்துசாமி கூறியதாவது: கட்சிப் பணிகளை சிறப்புடன் மேற்கொள்ள, தலைவர் சில மாற்றங்களை செய்துள்ளார். மாநில, மாவட்ட அளவில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் ஈரோடு மத்திய மாவட்டம் என்ற புதிய மாவட்டத்தை உருவாக்கி பெருந்துறை, பவானி தொகுதியை
சேர்த்துள்ளனர். மாவட்டம் மூன்றாக பிரிக்கப்பட்டாலும், மூன்று மாவட்ட செயலாளர்களும் ஒருங்கிணைந்து செயலாற்றுவோம். கருத்து வேறுபாடு இருந்தால், அதை பேசி தீர்த்து கொண்டு, கட்சி வளர்ச்சிக்காக பணியாற்றுவோம்.
இவ்வாறு கூறினார்.