/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஆபத்தான போர்வெல்மூட வலியுறுத்தி மனு
/
ஆபத்தான போர்வெல்மூட வலியுறுத்தி மனு
ADDED : பிப் 19, 2025 01:36 AM
ஆபத்தான போர்வெல்மூட வலியுறுத்தி மனு
ஈரோடு:டி.என்.பாளையம் அருகே கொங்கர்பாளையம் பஞ்., முன்னாள் வார்டு உறுப்பினர் இளங்கோவன் தலைமையில், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், வழங்கிய மனுவில் கூறியதாவது: கொங்கர்பாளையம் பஞ்., வினோபா நகரில், 1,000 அடி ஆழத்தில் ஆழ்துளை கிணற்றை சிலர் அமைத்து, வெகு துாரத்துக்கு தண்ணீரை கொண்டு செல்கின்றனர். இதைப்பார்த்து பலரும் போர்வெல் அமைத்து தண்ணீர் எடுத்து செல்லும் நிலை உருவாகியுள்ளது. இதே பகுதியில் பஞ்.,க்கு சொந்தமான திறந்தவெளி கிணறும் உள்ளதால், ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் உறிஞ்சும்போது, கோடை காலத்தில் திறந்தவெளி கிணற்றில் தண்ணீர் வற்றும். மக்கள் சிரமப்படும் சூழல் ஏற்படும். இப்பிரச்னை தொடர்பாக, 2022ல் பஞ்சாயத்தில் விவாதிக்கப்பட்டு, போர்வெல்லை மூட நடவடிக்கை எடுக்க முடிவு செய்தனர். மக்கள் நலன் கருதி இதுபோன்ற ஆழ்துளை கிணற்றை மூட வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.

