/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நடமாடும் வாகனத்தில்மாநகரில் வரி வசூல்
/
நடமாடும் வாகனத்தில்மாநகரில் வரி வசூல்
ADDED : பிப் 19, 2025 01:36 AM
நடமாடும் வாகனத்தில்மாநகரில் வரி வசூல்
ஈரோடு:ஈரோடு மாநகராட்சியில், 2024-25 நிதியாண்டுக்கான சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, குப்பை வரி உள்ளிட்ட, நிலுவை வரியை, மார்ச் 31க்குள், 100 சதவீதம் வசூலிக்க அதிகாரிகள் திட்டமிட்டிருக்கின்றனர். இதற்காக மாநகராட்சி வரி வசூல் மையங்கள் விடுமுறை நாட்களிலும் செயல்படுகின்றன. நான்கு மண்டலங்களில், 400 ஊழியர் நியமிக்கப்பட்டு, வரி வசூலில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மாநகராட்சியில் மொபைல் வாகனம் மூலம், வரி வசூல் பணி நேற்று தொடங்கியது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: மாநகராட்சியில் தினம் ஒரு வார்டு வீதம் வரி வசூல் தொடங்கியுள்ளது. மக்களின் வீட்டுக்கே சென்று வரி வசூலிப்பதால், அவர்களுக்கான நேரத்தை மிச்சமாக்குகிறோம். இவ்வாறு கூறினர்.