/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மேல்நிலைப்பள்ளி பொது தேர்வுபள்ளி கல்வித்துறை மும்முரம்
/
மேல்நிலைப்பள்ளி பொது தேர்வுபள்ளி கல்வித்துறை மும்முரம்
மேல்நிலைப்பள்ளி பொது தேர்வுபள்ளி கல்வித்துறை மும்முரம்
மேல்நிலைப்பள்ளி பொது தேர்வுபள்ளி கல்வித்துறை மும்முரம்
ADDED : பிப் 20, 2025 01:54 AM
மேல்நிலைப்பள்ளி பொது தேர்வுபள்ளி கல்வித்துறை மும்முரம்
ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 பொது தேர்வை, 108 மையங்களில், 47,384 மாணவ--மாணவியர் எழுதுகின்றனர்.
தமிழகத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச், 3 தொடங்கி, 23 வரையும், பிளஸ் 1 பொதுத்தேர்வு மார்ச், 5 தொடங்கி, 25ல் முடிகிறது. பிளஸ் 2 தேர்வை, 23,071 மாணவ, -மாணவியர், பிளஸ் 1 பொது தேர்வை, 23,289 மாணவ, -மாணவியர், தனி தேர்வர்கள் என மொத்தம், 47,384 பேர், 108 மையங்களில் எழுதுகின்றனர்.
ஏற்கனவே, முகப்பு சீட்டுடன் கூடிய விடைத்தாள், அந்தந்த தேர்வு மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச், 28 தொடங்கி, ஏப்., 15ல் முடிகிறது. 24,913 மாணவ, -மாணவியர், தனித்தேர்வர்கள் என மொத்தம், 25,979 பேர், 117 மையங்களில் தேர்வு எழுதுகின்றனர்.
தேர்வுகளை சிறப்பாக நடத்திட, கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நாளை அல்லது 24ல், அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இதில், பஸ் வசதி, தடையற்ற மின்சாரம், சுகாதாரம், பள்ளி வளாக துாய்மை குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக முதன்மை கல்வி அலுவலர் சுப்பாராவ் தெரிவித்தார்.