/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சொசைட்டியில் முறைகேடுகூட்டுறவு செயலருக்கு சிறை
/
சொசைட்டியில் முறைகேடுகூட்டுறவு செயலருக்கு சிறை
ADDED : பிப் 26, 2025 01:12 AM
சொசைட்டியில் முறைகேடுகூட்டுறவு செயலருக்கு சிறை
ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபியில் உள்ள, கோபி கூட்டுறவு வீடு கட்டுவோர் சொசைட்டி செயலாளர் வெங்கடேசன், 58; இவரது அலுவலகத்தில் ஈரோடு லஞ்ச ஒழிப்பு துறை போலீசார், 2009 ஏப்.,21ல் சோதனை நடத்தினர். அப்போது உறுப்பினர்களின் கையெழுத்தை போலியாக போட்டு, நிலை வைப்பு தொகை, 15.90 லட்சம் ரூபாயை, கடனாக எடுத்து கொண்டது தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில், ௩.௫௫ லட்சம் ரூபாய் ரொக்கமாக சொசைட்டியில் இருந்தது உறுதியானது. 12.௩௫ லட்சம் ரூபாய் முறைகேடு செய்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
ஈரோடு தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. இதில் மாஜிஸ்திரேட் ராமச்சந்திரன் நேற்று தீர்ப்பளித்தார். வெங்கடேசனுக்கு இரண்டாண்டு சிறை, 13 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

