/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஆடுகளை இழந்த விவசாயிகள்அண்ணாமலையிடம் முறையீடு
/
ஆடுகளை இழந்த விவசாயிகள்அண்ணாமலையிடம் முறையீடு
ADDED : மார் 02, 2025 01:39 AM
ஆடுகளை இழந்த விவசாயிகள்அண்ணாமலையிடம் முறையீடு
ஈரோடு:பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, ஈரோட்டில் நேற்று நடந்த ஒரு திருமண நிகழ்வில் பங்கேற்றார். முன்னதாக அவரை, சென்னிமலை ராமலிங்கபுரத்தை சேர்ந்த வசந்தா மணி, 55, பாலசுப்பிரமணியம், 34, சந்தித்து முறையீடு செய்தனர்.
வசந்தாமணி கூறும் போது, '15 ஆடுகளை பட்டியில் வைத்து வளர்த்தேன். வெறி நாய்கள் கடித்ததில், 12 ஆடுகள் பலியாகின. மூன்று ஆடுகள் மோசமான நிலையில் உள்ளன' என்றார். பாலசுப்பிரமணியம் கூறும் போது, 'பட்டியில் இருந்த, 20 ஆடுகளை தெரு நாய்கள் கடித்து குதறி விட்டன. எங்களுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை விடுத்துள்ளோம்.
ஆனால் இழப்பீடு கிடைக்குமா? என தெரியவில்லை. இதனால் வாழ்வாதாரத்துக்கு வழி தெரியாமல் தவிக்கிறோம்' என்றார். இருவருக்கும் ஆறுதல் கூறிய அண்ணாமலை, பா.ஜ., நிர்வாகிகளிடம் விபரம் கேட்டறிந்தார். ''மாநில அரசிடம் உரிய நிவாரணம் பெற்று தர, பா.ஜ., சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என அண்ணாமலை உறுதியளித்து சென்றார்.