/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
செ.பாளையத்தில் தேர்திருவிழா இன்று நிறைவு
/
செ.பாளையத்தில் தேர்திருவிழா இன்று நிறைவு
ADDED : மார் 06, 2025 01:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செ.பாளையத்தில் தேர்திருவிழா இன்று நிறைவு
அந்தியூர்:அந்தியூர் அருகே செம்புளிச்சாம்பாளையத்தில் பிரசித்தி பெற்ற முனியப்ப சுவாமி கோவிலில், நடப்பாண்டு விழாவில், 60 அடி மகமேரு தேரில் முனியப்ப சுவாமி, பெருமாள் சுவாமியும், சிறு சப்பரத்தில் காமாட்சியம்மனும், கோவில் வனத்துக்கு நேற்று ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. இதையொட்டி பக்தர்கள் கிடா வெட்டி பொங்கல் வைத்து வழிபட்டனர். இன்று தேர்கள் கோவில் மடத்தை வந்தடையும். இத்துடன் பண்டிகை நிறைவடைகிறது.