/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாகாளியம்மன் கோவிலில்குண்டம் விழா ஜோர்
/
மாகாளியம்மன் கோவிலில்குண்டம் விழா ஜோர்
ADDED : மார் 06, 2025 01:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாகாளியம்மன் கோவிலில்குண்டம் விழா ஜோர்
ஈரோடு:ஈரோடு, சூரம்பட்டி, ஸ்ரீமாகாளியம்மன் கோவிலில் நடப்பாண்டு குண்டம் மற்றும் பொங்கல் விழாவில், நேற்று முன்தினம் மாலை காவிரி ஆற்றுக்கு சென்று பக்தர்கள் புனித நீராடி தீர்த்தம் கொண்டு வந்தனர். நேற்று அதிகாலை குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதை தொடர்ந்து கோவில் வளாகத்தில் ஏராளமான பெண்கள் பொங்கல்
வைத்து வழிபட்டனர்.