/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'தொண்டனாக இருந்துநல்லாட்சி அமைப்போம்'
/
'தொண்டனாக இருந்துநல்லாட்சி அமைப்போம்'
ADDED : மார் 06, 2025 01:14 AM
'தொண்டனாக இருந்துநல்லாட்சி அமைப்போம்'
கோபி:ஈரோடு அ.தி.மு.க., புறநகர் மேற்கு மாவட்டம் சார்பில் செயல்வீரர் கூட்டம், கோபியில் நேற்று நடந்தது. இதில் முன்னாள் அமைச்சரும், கோபி எம்.எல்.ஏ.,வுமான செங்கோட்டையன் தலைமை வகித்து பேசியதாவது:
அ.தி.மு.க., பொது செயலர் மற்றும் எதிர்கட்சி தலைவரின் ஆணைப்படி, இந்த கூட்டம் நடக்கிறது. இதற்கு முன் கோபியில் நடந்த ஆய்வு கூட்டத்தில், உறுப்பினர் சேர்க்கைக்கான புத்தகத்தை வழங்கினோம். பொது செயலர் என்று உத்தரவிட்டாரோ, அப்போதே அந்த பணியை முடித்து விட்டோம். செயலாற்றுவதில் ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் என்றைக்கும் சளைத்தவர்கள் அல்ல. கட்சியினருக்கு கடிதம் எழுத தலைமை எங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. நான் நேரடியாகவே உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். வரும், 9ல் நடக்கும் காணொலி காட்சியில், பொது செயலர் பேசவுள்ளார். அதில் நாம் கலந்து கொள்ள வேண்டியுள்ளது. அதில் நீங்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும். ஒற்றுமையோடு பணியாற்றி, 2026 சட்டசபை தேர்தலில், நாம் அத்தனை பேரும் தொண்டனாக இருந்து, நல்லாட்சியை அமைத்து காட்டுவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
அன்னை சத்யா நகரில் குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கீடுகோரிக்கை அதிகரித்ததால் சலசலப்பு-அதிகாரிகள் பதில்
ஈரோடு:ஈரோட்டில் புதிய அடுக்குமாடி குடியிருப்பில், 85 வீடுகள் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டன.ஈரோடு பி.பி.அக்ரஹாரம் அன்னை சத்யா நகரில், நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கட்டப்பட்ட பழைய அடுக்குமாடி குடியிருப்புகளை இடித்து விட்டு, ஐந்து தளங்களுடன், 330 வீடுகள் புதிதாக கட்டப்பட்டன. வீடுகளுக்கான பயனாளிகள் பங்களிப்பு தொகை, 66,016 ரூபாய் செலுத்த நோட்டீஸ் வழங்கினர். அதில், 97 பேர் மட்டும் முழு தொகை செலுத்தினர். இவர்களுக்கு மட்டும் குடியிருப்பு வீடுகளை ஒதுக்க குலுக்கல் முறை தேர்வு நேற்று நடந்தது.
நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய நிர்வாக பொறியாளர் சரவணகுமார் தலைமையில், உதவி நிர்வாக பொறியாளர் ஜெயந்திமாலா, உதவி பொறியார் சந்திரஹரி மற்றும் அதிகாரிகள் குலுக்கல் மூலம் வீடுகளை ஒதுக்கினர். அப்போது ஏற்கனவே தரைத்தளத்தில் இருந்தவர்கள், அதே தளத்தில் தங்களுக்கு வீடுகளை ஒதுக்கீடு செய்து தர கோரிக்கை விடுத்தனர். அதிகாரிகளோ, 'குலுக்கலில் கிடைக்கும் எண் கொண்ட வீட்டையே ஒதுக்கீடு செய்து தர இயலும்' என்றனர். இதனால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. பணம் செலுத்தியவர்களில், 85 பேர் மட்டும் பங்கேற்றனர். அவர்களுக்கு குலுக்கலில் ஒதுக்கீடு செய்யப்பட்டு வீட்டு விபரம் தெரிவித்தனர். பணம் செலுத்தாத சில நபர்களும், 'தாங்கள் பணத்தை செலுத்திய பின்னரே குலுக்கலை நடத்த வேண்டும்' என கோரிக்கை எழுப்பினர்.
இதுபற்றி அதிகாரிகள் கூறியதாவது: பழைய அடுக்குமாடி குடியிருப்பின் தரத்தளத்தில், 76 வீடுகள் இருந்தன. புதிய அடுக்குமாடி குடியிருப்பின் தரத்தளத்தில், 55 வீடுகள் மட்டுமே உள்ளன. இதனால் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தரைத்தளம் ஒதுக்கீடு செய்து வழங்கப்பட்டது. பங்களிப்பு தொகையை தாதமாக செலுத்துபவர்களுக்கு, வீடு எந்த தளத்தில்
காலியாக உள்ளதோ அதற்கேற்ப ஒதுக்கீடு செய்யப்படும். இவ்வாறு கூறினர்.