/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தி.மு.க., ஓட்டுச்சாவடிஆலோசனை கூட்டம்
/
தி.மு.க., ஓட்டுச்சாவடிஆலோசனை கூட்டம்
ADDED : மார் 08, 2025 02:39 AM
தி.மு.க., ஓட்டுச்சாவடிஆலோசனை கூட்டம்
காங்கேயம்:காங்கேயம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ஓட்டுச்சாவடி ஒருங்கிணைப்பாளர், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர் ஆலோசனை கூட்டம் காங்கேயத்தில் நேற்று நடந்தது. திருப்பூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும் அமைச்சருமான சாமிநாதன் தலைமை வகித்தார். திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன், காங்கேயம் சட்டசபை தொகுதி பார்வையாளர் தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்தனர். தி.மு.க., செய்த நலத்திட்டங்களை மக்களிடம் எடுத்து செல்லவேண்டும். நிர்வாகிகள் தங்களது பகுதியில் சிறு கூட்டங்களை நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. காங்கேயம், வெள்ளகோவில், சென்னிமலை, குண்டடம் கிழக்கு ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள், ஓட்டுச்சாவடி ஒருங்கிணைப்பாளர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.