ADDED : மார் 08, 2025 02:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆடு திருடிய 'அரசன்' கைது
கோபி:கவுந்தப்பாடி அருகே பாண்டியம்பாளையத்தை சேர்ந்தவர் பெருமாள், 60, விவசாயி; நேற்று அதிகாலை 4:30 மணிக்கு, நாய் குலைக்கும் சப்தம் கேட்டு, வீட்டுக்கு வெளியே வந்து பார்த்தார். வீட்டு முன் கட்டியிருந்த இரு செம்மறி ஆடுகளை, மூவர் திருடிக்கொண்டு பைக்கில் தப்ப முயன்றனர். பெருமாள் சத்தமிடவே அக்கம்பக்கத்தினர் திரண்டு மூவரையும் வளைத்து பிடித்து, கவுந்தப்பாடி போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் ஈரோட்டை சேர்ந்த அரசன், 20, சித்தோட்டை சேர்ந்த வினோத், 20, விக்னேஷ்வரன், 19, என தெரியவந்தது. மூவரையும் கவுந்தப்பாடி போலீசார் கைது செய்தனர்.