ADDED : மார் 15, 2025 01:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மின் புதைவட கேபிள் பணி நிறைவு
சென்னிமலை:சென்னிமலை பேரூராட்சியில் முருகப்பெருமான் திருக்கோவில் தேரோட்டம் நடக்கும், நான்கு ராஜவீதிகளிலும், 78 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதை வட மின் கேபிள் அமைக்கும் பணி ஓராண்டுக்கும் முன் தொடங்கி நடந்தது. இந்தப்பணி நேற்று நிறைவடைந்து, மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. இந்நிகழ்வுக்கு பேரூராட்சி தலைவர் ஸ்ரீதேவி அசோக், மின்வாரிய செயற்பொறியாளர் வாசுதேவன் முன்னிலை வகித்தனர். இதன் மூலம் வரும் காலங்களில், முருகப்பெருமான் கோவில் தேரோட்டம், மின் கம்பிகள் மீது படும் அச்சமின்றி, தடையின்றி நடக்கும். பேரூராட்சி துணை தலைவர் சவுந்திரராஜன், மின் வாரிய உதவி செயற்பொறியாளர்கள் திவ்யா, சசிகலா, மின்வாரிய பணியாளர்கள் கலந்து கொண்டனர்.