/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
விளைபொருளுக்கு விலை கோரி ஆர்ப்பாட்டம்
/
விளைபொருளுக்கு விலை கோரி ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 15, 2025 01:44 AM
விளைபொருளுக்கு விலை கோரி ஆர்ப்பாட்டம்
ஈரோடு:
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், ஈரோடு சூரம்பட்டி நால்ரோட்டில், மாவட்ட துணை செயலாளர் லோகசாமி தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
விவசாயிகளின் விளைபொருட்களுக்கு கட்டுபடியான விலை நிர்ணயம் செய்ய வேண்டும். எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைப்படி விலை நிர்ணயிக்க வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களை தனியாருக்கு வழங்கக்கூடாது. பாண்டியாறு - மோயாறு - புன்னம்புழா இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். புதிய மின்சார திருத்த சட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்.
ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும். தெருநாய் கடித்து இறந்த ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் சின்னசாமி, குணசேகரன், பொன்னுசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.