/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மின் மயான வாசலில் குட்டைபோல் சாக்கடை
/
மின் மயான வாசலில் குட்டைபோல் சாக்கடை
ADDED : மார் 16, 2025 01:32 AM
மின் மயான வாசலில் குட்டைபோல் சாக்கடை
ராசிபுரம்:காளப்பநாயக்கன்பட்டி டவுன் பஞ்சாயத்தில், 15,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதி மக்களின் வசதிக்காக நாமக்கல் பைபாஸ் சாலை பகுதியில் மின் மயானம் அமைக்கும் பணி நடந்து வந்தது. பணிகள் முடிவடையும் சமயத்தில், மின் மயான வாசலில் கழிவுநீர் குட்டைபோல் தேங்கியுள்ளது.
பைபாஸ் சாலை உயரமாக இருப்பதால், கழிவுநீர் வடிந்து செல்ல முடியவில்லை. இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து தொடர்ந்து கழிவுநீர் வருவதால், கொஞ்சம் கொஞ்சமாக கழிவுநீர் அதிகரித்து வருகிறது. இதனால், மின் மயான கட்டுமான பணி பாதிக்கப்பட்டுள்ளது.
பணி முடிவடையாததால் பயன்பாட்டிற்கு திறப்பதற்கு முடியாமல் உள்ளது.எனவே, மின்மயானத்திற்கு முன் தேங்கியுள்ள சாக்கடையை அகற்ற, டவுன் பஞ்., நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.