/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பேரூராட்சி கவுன்சிலர் மாயம்கொடுமுடி போலீசார் உறுதி
/
பேரூராட்சி கவுன்சிலர் மாயம்கொடுமுடி போலீசார் உறுதி
பேரூராட்சி கவுன்சிலர் மாயம்கொடுமுடி போலீசார் உறுதி
பேரூராட்சி கவுன்சிலர் மாயம்கொடுமுடி போலீசார் உறுதி
ADDED : மார் 21, 2025 01:21 AM
பேரூராட்சி கவுன்சிலர் மாயம்கொடுமுடி போலீசார் உறுதி
ஈரோடு:கொடுமுடி, கொளத்துபாளையம் புதுார், கஞ்சமலை நாடார் வீதியை சேர்ந்த தேங்காய் வியாபாரி தனபால் மனைவி ரேவதி, 44; தம்பதிக்கு இரு மகள்கள் உள்ளனர். கொடுமுடி பேரூராட்சி ஏழாவது வார்டு (காங்.,) கவுன்சிலராக ரேவதி உள்ளார். தந்தை இறப்பை முன்னிட்டு திதி கொடுக்க, கொடுமுடி சென்று கடந்த, 19ம் தேதி காலை திதி கொடுத்து வீட்டுக்கு தனபால் திரும்பினார்.
வீட்டில் தனபாலின் தாய், இரு மகள்கள் மட்டும் இருந்தனர். மனைவி வீட்டில் இல்லை. பேரூராட்சியில் இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் நடக்கவுள்ள நிலையில் மாயமனதால் தனபால் அதிர்ச்சி அடைந்தார். அவரது புகாரின்படி கொடுமுடி போலீசார் விசாரித்தனர். 'தர்மபுரி மாவட்டம் அரூரில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு ரேவதி சென்றுள்ளார். இன்று நடக்கவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்புக்கு அவர் வருவார்' என்றும் கொடுமுடி போலீசார் தெரிவித்துள்ளனர்.