/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர்பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
/
டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர்பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர்பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர்பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : மார் 27, 2025 01:39 AM
டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர்பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
கரூர்:டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் பணிக்கு, விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய அரசின் நுகர்வோர் விவகாரத்துறை சார்பில், விலை கண்காணிப்பு கமிட்டி அத்தியாவசிய பொருட்களின் விலையை கண்காணித்திட, கரூர் மாவட்டத்திற்கு கணினி விபர பதிவாளர் (டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்) பணிக்கு மூன்று மாதங்களுக்கு மட்டும் தற்காலிகமாக நியமனம் செய்யப்படவுள்ளனர். இதற்கு, பி.ஏ., பொருளாதாரம், பி.எஸ்சி., புள்ளியியல், பி.எஸ்சி., கம்ப்யூட்டர் ஆகிய கல்வி தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அவர்கள், உரிய கல்வி சான்றிதழ்களின் நகலுடன் ஏப்., 10.க்குள் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகம், முதல் தளம், கரூர் கலெக்டர் அலுவலகம், கரூர் என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.