/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அரசு பள்ளி மாணவர்களுக்குசந்தையில் களப்பயண பயிற்சி
/
அரசு பள்ளி மாணவர்களுக்குசந்தையில் களப்பயண பயிற்சி
ADDED : மார் 28, 2025 01:01 AM
அரசு பள்ளி மாணவர்களுக்குசந்தையில் களப்பயண பயிற்சி
காங்கேயம்:காங்கேயம் பழையக்கோட்டை சாலையில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, களப்பயண பயிற்சி வழங்கப்பட்டது. இதற்காக தலைமை ஆசிரியர் பிரேமாவதி தலைமையில், காங்கேயம் வாரச்சந்தை, தீயணைப்பு நிலையத்துக்கு மாணவ, மாணவியர் அழைத்து செல்லப்பட்டனர். சந்தையில் பொருட்களின் விலை விபரம், விற்பனை கொள்முதல், லாப-நட்டம் உள்ளிட்ட தகவல்களை மாணவர்களே வியாபாரிகளிடம் கேட்டறிந்தனர். இதை தொடர்ந்து தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தில், தீயணைப்பு விபத்து மற்றும் மீட்பு பணி குறித்தும், கிணறு மற்றும் நீரில் மூழ்கியவர்களை காப்பாற்றுதல், பாம்பு கடி, பாம்பு பிடித்தல், தீயணைக்கும் முறை உள்ளிட்ட பயிற்சி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.