/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரம்ஜானால் சந்தையில் ஆடு விற்பனை மந்தம்
/
ரம்ஜானால் சந்தையில் ஆடு விற்பனை மந்தம்
ADDED : மார் 28, 2025 01:05 AM
ரம்ஜானால் சந்தையில் ஆடு விற்பனை மந்தம்
புன்செய்புளியம்பட்டி:புன்செய்புளியம்பட்டி கால்நடை சந்தை வாரந்தோறும் வியாழக்கிழமை கூடுகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வாங்க, விற்க வருகின்றனர்.
ரம்ஜான் பண்டிகை நெருங்குவதால் ஆடுகள் விற்பனை அமோகமாக இருக்கும் என்று எண்ணி கால்நடை வியாபாரிகள் அதிகமானோர் வந்திருந்தனர். ஆனால், ஆடுகள் வரத்து குறைவாகவே இருந்தது. ஆயிரக்கணக்கான வெள்ளாடு, செம்மறி ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும் நிலையில், 300 ஆடுகளே கொண்டு வரப்பட்டது. 10 கிலோ ஆட்டின் விலை, 6,000 முதல் 7,௦௦௦ ரூபாய் வரை விற்றது. இதனால் வாரச்சந்தையில் ஆடுகளின் விற்பனை வழக்கத்தை விட, 20 லட்சம் ரூபாய்க்கு
மட்டுமே நடந்தது.