ADDED : ஏப் 03, 2025 01:31 AM
சேலம் ரவுடி கொலைமேலும் ஒருவர் கைது
ஈரோடு:ரவுடி ஜான் கொலை வழக்கில், சேலத்தை சேர்ந்த மேலும் ஒரு வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சேலம், கிச்சிப்பாளையம் சுந்தர் தெருவை சேர்ந்தவர் ஜான், 30. கடந்த, 19ல் நசியனுார் அருகே காரில் மனைவியுடன் சென்ற போது, அவரை பின் தொடர்ந்த மற்றொரு காரில் வந்தவர்கள், ஜான் காரில் மோதினர். பின்னர் ஜானை காரில் வைத்தே கொலை செய்தனர். இது தொடர்பாக, சேலம்
கிச்சிப்பாளையத்தை சேர்ந்த ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நான்கு பேர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.
இந்நிலையில், கிச்சிப்பாளையம் முனியப்பன் கோவில் வீதியை சேர்ந்த குமரேசன் மகன் விக்கி (எ) விக்னேஸ்வரன், 30, என்பவரை சித்தோடு போலீசார் கொலை வழக்கு தொடர்பாக கடந்த, 30ல் கைது செய்தனர்.
நீதிமன்றத்தில் சரணடைந்த நால்வரையும், கஸ்டடி எடுத்து விசாரிக்கப்படுவர் என, சித்தோடு போலீசார் தெரிவித்தனர்.
