/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வேளாண் அடுக்கக திட்டத்தில்இணைய விவசாயிகளுக்கு அழைப்பு
/
வேளாண் அடுக்கக திட்டத்தில்இணைய விவசாயிகளுக்கு அழைப்பு
வேளாண் அடுக்கக திட்டத்தில்இணைய விவசாயிகளுக்கு அழைப்பு
வேளாண் அடுக்கக திட்டத்தில்இணைய விவசாயிகளுக்கு அழைப்பு
ADDED : ஏப் 03, 2025 01:48 AM
வேளாண் அடுக்கக திட்டத்தில்இணைய விவசாயிகளுக்கு அழைப்பு
ஈரோடு:ஈரோடு, சென்னிமலை வட்டார விவசாயிகள் பார்வைக்காக, வேளாண் உதவி இயக்குனர் சாமுவேல் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழக அரசின் பல்துறை சார்ந்த திட்டங்களில், விவசாயிகள் பயன் பெற வேளாண் அடுக்ககம் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் இணைய, அருகே உள்ள இ-சேவை மையம், வட்டார வேளாண், தோட்டக்கலை அலுவலகத்தை அணுகி, விவசாயிகள் தங்களது ஆதார் எண், அதனுடன் இணைக்கப்பட்ட மொபைல் போன் எண், நில உரிமை ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
'கிரைன்ஸ்' என்ற இணையத்தில் விபரம் சேகரித்து, வேளாண், தோட்டக்கலை துறை, வேளாண் பொறியியல் துறை, ஊரக வளர்ச்சி துறை, கால்நடை பராமரிப்பு துறை, உணவு வழங்கல் துறை என அனைத்து துறைகளின் திட்ட பயன்களும், இதன் மூலம் வழங்கப்படும்.
நிதி திட்ட பலன்கள், ஆதார் எண் அடிப்படையில் நேரடி பண பரிமாற்றம் மூலம், விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.