sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ போட்டோ - ஜியோ ஆர்ப்பாட்டம்

போட்டோ - ஜியோ ஆர்ப்பாட்டம்

போட்டோ - ஜியோ ஆர்ப்பாட்டம்


ADDED : ஏப் 04, 2025 01:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 04, 2025 01:22 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

போட்டோ - ஜியோ ஆர்ப்பாட்டம்

ஈரோடு:அனைத்து அரசு அலுவலர், ஆசிரியர்கள், உள்ளாட்சி பணியாளர்கள் கூட்டமைப்பான போட்டா-ஜியோ சார்பில், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய முதன்மை ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் தலைமை வகித்தார்.

தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிப்படி காலம் தாழ்த்தாமல் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை தி.மு.க., அரசு அமலாக்க வேண்டும்.

நிதி பற்றாக்குறையை காரணம் கூறி, 2020ல் நிறுத்தப்பட்ட சரண் விடுப்பு சலுகையை, 2026 ஏப்., 1 முதல் பணமாக்கி கொள்ளலாம் என அறிவிப்பு வெளியிட்டிருப்பதை ரத்து செய்து, 2025 ஏப்., 1 முதல் பணமாக்கி கொள்ள ஆணை வழங்க வேண்டும்.

தமிழக அரசு அலுவலர்களுக்கு வழங்கிய, ஏழாவது ஊதியக்குழு நிர்ணயத்தில், 21 மாத தொகை நிலுவையாக உள்ளது. அதை விடுவித்து நிலுவைத்தொகையை வழங்க வேண்டும். 2009 ஜூன், 1 முதல் பணியேற்று, 7 வது ஊதியக்குழுவின் மூலம் ஊதிய கட்டமைப்பில் பாதிக்கப்பட்டு, ஓராண்டு காலம் இடைவெளியில், 15,000 ரூபாய்க்கும் குறைவான மாத ஊதியம் பெறும் இடைநிலை மற்றும் முதுநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைந்து, உரிய ஊதியம் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us