ADDED : ஏப் 04, 2025 01:26 AM
அ நிறம் | அளவு
குப்பைக்கு தீ வைத்தமுதியவர் பரிதாப சாவு
கொடுமுடி:கொடுமுடி, எழுநுாற்றி மங்கலம், தேவகி அம்மாபுரத்தை சேர்ந்தவர் கருணாநிதி, 64; வெள்ளியங்காடு தோட்டத்தில் கடந்த, 31ம் தேதி மதியம் குப்பைகளை கூட்டி தீ வைத்தார்.
எரிந்து முடிந்த நிலையில் கால் தவறி தீக்குள் விழுந்தார். கொடுமுடி அரசு மருத்துவமனையில் சேர்த்து, கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் இறந்தார். கொடுமுடி போலீசார் விசாரிக்கின்றனர்.
