/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கள் இறக்க அரசு அனுமதிகொ.ம.தே.க., எதிர்பார்ப்பு
/
கள் இறக்க அரசு அனுமதிகொ.ம.தே.க., எதிர்பார்ப்பு
ADDED : ஏப் 04, 2025 01:27 AM
கள் இறக்க அரசு அனுமதிகொ.ம.தே.க., எதிர்பார்ப்பு
சென்னிமலை:கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, சென்னிமலை தெற்கு ஒன்றிய ஆலோசனை கூட்டம் சென்னிமலையில் நடந்தது. மாவட்ட வர்த்தக அணி செயலாளர் பொன்னுசாமி தலைமை வகித்தார். ஒன்றிய நெசவாளர் அணி செயலாளர் ராமசாமி முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர் யுவராசன் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கின்னஸ் சாதனை புரிந்த, வள்ளி கும்மி கலைஞர்களுக்கு, கோவை கொடிசியா மைதானத்தில், நாளை மறுதினம் நடக்கும் பாராட்டு விழாவில், ஒன்றியத்திலிருந்து அதிகமானோர் கலந்து கொள்ள வேண்டும். சென்னிமலை முருகன் கோவில் மலைப்பாதை விரிவாக்கம் மற்றும் சீரமைப்பு பணியை விரைந்து முடிக்க வேண்டும். விவசாயிகள் கள் இறக்குவதற்கு, அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்பது உட்பட பல தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

