sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ எரங்காட்டூர் பெண் தற்கொலைபெருந்துறையில் சாலை மறியல்

எரங்காட்டூர் பெண் தற்கொலைபெருந்துறையில் சாலை மறியல்

எரங்காட்டூர் பெண் தற்கொலைபெருந்துறையில் சாலை மறியல்


ADDED : ஏப் 05, 2025 01:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 05, 2025 01:51 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

எரங்காட்டூர் பெண் தற்கொலைபெருந்துறையில் சாலை மறியல்

பெருந்துறை:டி.என்.பாளையத்தை அடுத்த எரங்காட்டூரை சேர்ந்தவர் ேஹமப்பிரியா, 38; டைலரான இவர், கடந்த, 2ம் தேதி இரவு வீட்டில் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரியில் சேர்க்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் இறந்தார். பங்களாப்புதுார் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், ஹேமப்பிரியா உடற்கூறு பரிசோதனை நேற்று நடந்தது. உறவினர்கள் உடலை வாங்க மறுத்து, குன்னத்துார் நால்ரோட்டில் மாலையில் மறியலில் ஈடுபட்டனர். பெருந்துறை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிட செய்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது: ஹேமப்பிரியா கோபியில் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றுள்ளார். கடன் தொகையை கட்டாததால், அந்நிதி நிறுவன ஊழியர்கள் வீட்டுக்கு சென்று கேட்டுள்ளனர். இதில் மனமுடைந்தவர் தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். நிதி நிறுவனத்தின் மீது நடவடிக்கை கோரி, உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். இவ்வாறு கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us