/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கணக்கீடு எடுக்க முடியலமின் வாரியம் கோரிக்கை
/
கணக்கீடு எடுக்க முடியலமின் வாரியம் கோரிக்கை
ADDED : ஏப் 05, 2025 01:51 AM
கணக்கீடு எடுக்க முடியலமின் வாரியம் கோரிக்கை
காங்கேயம்:காங்கேயம் மின்வாரிய செயற்பொறியாளர் விமலாதேவி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:காங்கேயம் கோட்டத்தில் முத்துார் பிரிவு அலுவலகத்தில் உள்ள எம்.கே., வலசு பகிர்மானத்தில், எம்.கே.வலசு, ரங்கப்பையன்காடு, காந்திநகர், முருகம்பாளையம், இடைக்காட்டுவலசு, அமராவதிபாளையம், பாரதிபுரம், இச்சிக்காட்டுவலசு, வாய்க்கால் பாலம், புஷ்பகிரி, ராசாத்தாவலசு, அத்தப்பம்பாளையம் புதுார் பகிர்மானங்
களுக்கு நிர்வாக காரணத்தால் ஏப்., மாத கணக்கீடு மேற்கொள்ள இயலவில்லை. இப்பகுதி நுகர்வோர் கடந்த பிப், மாத மின் தொகையையே ஏப்ரல் மாதத்துக்கும் செலுத்த வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

