/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தி.மு.க., சார்பில்நீர் மோர் பந்தல் திறப்பு
/
தி.மு.க., சார்பில்நீர் மோர் பந்தல் திறப்பு
ADDED : ஏப் 11, 2025 01:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தி.மு.க., சார்பில்நீர் மோர் பந்தல் திறப்பு
ஈரோடு:ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க., இளைஞரணி சார்பில், நீர் மோர் பந்தல் திறப்பு விழா மணிக்கூண்டில் நடந்தது. ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ., சந்திரகுமார் முன்னிலை வகித்தார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திருவாசகம் வரவேற்றார். வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, நீர் மோர் பந்தலை திறந்து வைத்து, மக்களுக்கு மோர், தண்ணீர், பழங்கள், பழச்சாறு வழங்கினார். மாநகர செயலாளர் சுப்பிரமணியம், முன்னாள் எம்.பி., கந்தசாமி, மாநகராட்சி மண்டல தலைவர் பழனிசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.