/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கொங்கு பாலிடெக்னிக்கில்பணி நியமன ஆணை வழங்கல்
/
கொங்கு பாலிடெக்னிக்கில்பணி நியமன ஆணை வழங்கல்
ADDED : ஏப் 16, 2025 01:07 AM
கொங்கு பாலிடெக்னிக்கில்பணி நியமன ஆணை வழங்கல்
பெருந்துறை:பெருந்துறை, கொங்கு பாலிடெக்னிக் கல்லுாரியில் மூன்றாமாண்டு பட்டயம் பயின்ற மாணவர்களுக்கு பிரிவுபசார விழா மற்றும் வேலை வாய்ப்பு நியமன ஆணை வழங்கும் விழா நடந்தது. கொங்கு வேளாளர் கல்வி அறக்கட்டளை தலைவர் குமாரசாமி தலைமை வகித்தார். பாலிடெக்னிக் தாளாளர் வெங்கடாச்சலம் முன்னிலை வகித்தார். கல்லுாரி முதல்வர் வேதகிரி ஈஸ்வரன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக சென்னை பிரேக்ஸ்
இந்தியா நிறுவன ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி பங்கேற்று, வேலை வாய்ப்பு ஆணை வழங்கி பேசினார். விழாவில் பல்வேறு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்ற மூன்றாமாண்டு மாணவ, மாணவிகள், 273 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. விழாவில் ஈரோடு கொங்கு நேசனல் மெட்ரிக் தாளாளர் தேவராஜா, சென்னை பிரேக்ஸ் இந்தியா நிறுவன மேலாளர் கிறிஸ்டோபர், கல்லுாரி துணை முதல்வர் செந்தில்குமார், கொங்கு ஐ.டி.ஐ., முதல்வர் தினேஷ்குமார்
உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.