/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவு வரன்முறைக்கு அவகாசம் நீட்டிப்பு
/
அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவு வரன்முறைக்கு அவகாசம் நீட்டிப்பு
அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவு வரன்முறைக்கு அவகாசம் நீட்டிப்பு
அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவு வரன்முறைக்கு அவகாசம் நீட்டிப்பு
ADDED : ஜூலை 03, 2025 01:18 AM
ஈரோடு, கடந்த, 2016 அக்., 20க்கு முன் அனுமதியற்ற மனைப்பிரிவுகளில், முன்பதிவு செய்யப்பட்ட தனிமனைகளுக்கு காலக்கெடு இன்றி, மனு பெறப்பட்டு வரன்முறை செய்து கொடுக்கப்படுகிறது.
அவ்வாறு தனிமனையாக வாங்கிய பொதுமக்கள் பயன் பெறும் வகையில், onlineppa.tn.gov.in என்ற இணைய முகவரி மூலம் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.
ஏற்கனவே வெளியிடப்பட்ட அறிவிப்பில் கடந்த, 30 வரை விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்யப்பட்டிருந்தது. இருப்பினும், இத்திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்புவோர், www.tcponline.tn.gov.in என்ற இணைய தள முகவரியில் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். இதுபோல மலையிட பகுதிகளில் உள்ள, அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த விண்ணப்பங்களை, www.tnhillarealayoutreg.in என்ற இணைய தளத்துக்கு வரும் நவ., 30 வரை, www.tcponline.tn.gov.in என்ற இணைய தளம் மூலம் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.