/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,907 வழக்குகளுக்கு தீர்வு
/
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,907 வழக்குகளுக்கு தீர்வு
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,907 வழக்குகளுக்கு தீர்வு
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,907 வழக்குகளுக்கு தீர்வு
ADDED : மார் 09, 2025 01:37 AM
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,907 வழக்குகளுக்கு தீர்வு
ஈரோடு:ஈரோடு மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில், தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று நடந்தது.ஈரோடு சம்பத்நகர் ஒருங்கிணைந்த நீதிமன்றம், பவானி, கோபி, பெருந்துறை, சத்தியமங்கலம், அந்தியூர், கொடுமுடி நீதிமன்றங்களிலும் மக்கள் நீதிமன்றம் நடந்தது. மாவட்டம் முழுவதும், 6,765 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன.
சம்பத்நகர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்துக்கு, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான முருகேசன் தலைமை வகித்தார். மகளிர் நீதிமன்ற நீதிபதி சொர்ணகுமார், குடும்பநல நீதிபதி ஹேமா, தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு ராமச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர். குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வரும் விவாகரத்து வழக்குகளும் விசாரிக்கப்பட்டது.
முதன்மை மாவட்ட நீதிபதி முருகேசன் முன்னிலையில் நடந்த விசாரணையின் போது, இரு தம்பதியினர் மீண்டும் கணவன்--மனைவியாக சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்தனர். இந்த இரு வழக்குகளும் முடித்து வைக்கப்பட்டன.
மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில், 1,907 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. வங்கிக்கடன், கட்டண நிலுவை, நிலம் தொடர்பான வழக்குகள் என முடித்து வைக்கப்பட்ட வழக்குகளின் மொத்த மதிப்பு, 30 கோடியே, 55 லட்சத்து 17 ஆயிரத்து 221 ரூபாய். மோட்டார் வாகன விபத்து வழக்கு ஒன்றில், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு இழப்பீடாக, 80 லட்சம் ரூபாய் மக்கள் நீதுமன்றம் மூலம் பெற்று தரப்பட்டது.
ஈரோடு மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர் ஸ்ரீவித்யா நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து நடத்தினார்.* திருப்பூர் மாவட்டம், தாராபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், வட்ட சட்ட பணிகள் குழு சார்பில், சார்பு நீதிபதி சக்திவேல் தலைமையில், மாவட்ட உரிமையியல் நீதிபதி மதிவதனி வணங்காமுடி, குற்றவியல் நடுவர் உமா மகேஸ்வரி முன்னிலையில் மக்கள் நீதிமன்றம் நடந்தது. இதில், 109 குற்றவியல் சிறு வழக்கு, 71 உரிமையியல் வழக்கு, மோட்டார் வாகன விபத்து வழக்கு 15 உள்பட மொத்தம், 197 வழக்குகளுக்கு, ஒரே நாளில் தீர்வு காணப்பட்டது. இதன் மொத்த மதிப்பு, 15 கோடியே, 23 லட்சத்து, 8,452 ரூபாய். வாகன விபத்தில் முழு ஊனம் அடைந்த இன்ஜினியரிங் மாணவர் கபிலனுக்கு, நஷ்ட ஈடு தொகையாக, 90 லட்சத்திற்கான காசோலையை, வழக்கறிஞர்கள் ஆசிக்பாஷா, இளஞ்செழியன் முன்னிலையில், சார்பு நீதிபதி
சக்திவேல் வழங்கினார்.