ADDED : ஆக 14, 2024 01:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: சித்தோடு, கொங்கம்பாளையத்தை சேர்ந்தவர் சுப்ரமணி, 69; சிறு-மிக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில், பவானி அனைத்து மகளிர் போலீசார், போக்சோ வழக்கில் கைது செய்து, நீதிமன்-றத்தில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இதேபோல் அந்தியூர், தவிட்டுப்பாளையத்தை சேர்ந்த வெங்கட் ரேணுகா, 67, சிறுமியிடம் பாலியல் சீண்டல் செய்த வழக்கில், பவானி அனைத்து மகளிர் போலீசார் போக்சோவில் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இருவரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய, கலெக்டருக்கு பரிந்து-ரைக்கப்பட்டது. கலெக்டர் இதை ஏற்றதால், இருவர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது.

