/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காங்கேயம் அருகே நாய்கள் கடித்து 22 ஆடுகள் பலிஇழப்பீடு கோரி விவசாயிகள் மறியல்

ADDED : பிப் 14, 2025 01:12 AM
காங்கேயம் அருகே நாய்கள் கடித்து 22 ஆடுகள் பலிஇழப்பீடு கோரி விவசாயிகள் மறியல்
காங்கேயம், :காங்கேயம் அருகே நாய்கள் கடித்ததில், 22 ஆடுகள் பலியாகின. ஆடுகளுக்கு இழப்பீடு கேட்டு, விவசாயிகள் நடத்திய சாலை மறியலால், பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காங்கேயம் தாலுகா பகுதியில் ஓராண்டு காலமாக, கால்நடைகளை வெறிநாய் கடித்து வருகிறது. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக, விவசாயிகள் கால்நடைகளுடன் திருப்பூர் கலெக்டர் அலுவலக, காங்கேயம் தாசில்தார் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் போராட்டம் நடத்தியுள்ளனர்.
நேற்று முன்தினம் மாலை சிவன்மலை அருகே மூன்று வெள்ளாடுகளும், ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே ராமலிங்கபுரத்தில், 20 செம்மறி ஆடுகளும் நேற்று வெறிநாய்கள் கடித்து குதறியதில் உயிரிழந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி விவசாயிகள், காங்கேயம்- சென்னிமலை சாலை திட்டுப்பாறை அருகே பரவலசில், ஆடுகளின் உடல்களை சாலையில் போட்டு, நேற்று காலை, 11:00 மணி முதல் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
காங்கேயம் டி.எஸ்.பி., மாயவன் தலைமையில் காங்கேயம், வெள்ளகோவில், ஊதியூர், ஊத்துக்குளி போலீசார் குவிக்கப்பட்டனர். காங்கேயம் தாசில்தார் மோகனன், போலீசார் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
வெறிநாய்களால் உயிரிழந்த, உயிரிழக்கும் கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்க உத்தரவாதம் அளிக்க வேண்டும். இதற்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கும் வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததால், 250க்கும் மேற்பட்ட விவசாயிகள் மறியலை தொடர்ந்தனர். இதனால் காங்கேயம் சாலையில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.