தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ வீட்டு வேலை தொழிலாளருக்கு 31ல் நலவாரிய பதிவு முகாம்

வீட்டு வேலை தொழிலாளருக்கு 31ல் நலவாரிய பதிவு முகாம்

வீட்டு வேலை தொழிலாளருக்கு 31ல் நலவாரிய பதிவு முகாம்


ADDED : ஜன 29, 2025 01:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 29, 2025 01:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்: வீட்டு வேலை செய்யும் தொழிலாளர், நலவாரிய உறுப்பினராக பதிவு செய்யும் முகாம், 31ம் தேதி நடக்கிறது.

வீட்டு வேலை செய்யும் பணியில் ஈடுபடுவோர், தமிழ்நாடு வீட்டுப்பணியாளர் நலவாரியத்தில் பதிவு செய்யலாம். திருப்பூர் மாவட்டத்தில், வரும், 31ம் தேதி, பெருமாநல்லுார் ரோடு, மேட்டுப்பாளையம், காமராஜர் நகர் முதல் வீதியில் உள்ள தொழிலாளர் உதவி கமிஷனர் (சமூகபாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில், நலவாரிய பதிவு முகாம் நடக்க உள்ளது.

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த வீட்டுவேலை செய்யும் பணியாளர்கள், வீட்டுபணியாளர் நலவாரியத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இதன் மூலமாக, கல்வி, திருமணம், மகப்பேறு, கண் கண்ணாடி, இயற்கை மரணம், விபத்து மரண நிவாரணம், ஓய்வூதியம் போன்ற பயன்களை பெறலாம். நலவாரிய உறுப்பினராக பதிவு செய்யும் வகையில், ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தக முதல்பக்க நகல், பாஸ்போர்ட் போட்டோ ஆகியவற்றுடன் பங்கேற்கலாம். ஒருமுறை கடவு சொல் சரிபார்ப்புக்காக, ஆதார் மற்றும் ரேஷன் கார்டில் இணைக்கப்பட்ட மொபைல் போன் எடுத்து செல்ல வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us