/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஜெராக்ஸ் கடை பூட்டை உடைத்து 5,000 ரூபாய் திருட்டு
/
ஜெராக்ஸ் கடை பூட்டை உடைத்து 5,000 ரூபாய் திருட்டு
ADDED : மார் 20, 2025 01:41 AM
ஜெராக்ஸ் கடை பூட்டை உடைத்து 5,000 ரூபாய் திருட்டு
அந்தியூர்:அந்தியூர், தவிட்டுப்பாளையம் வேலாயுதம் வீதியை சேர்ந்த கோபிநாத், 29, அந்தியூர் தாலுகா அலுவலகம் அருகில், ஸ்டார் வின் என்ற பெயரில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு, கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார்.காலையில் கடைக்கு வந்தபோது, பூட்டியிருந்த பூட்டை காணாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். ஷட்டரை திறந்து உள்ளே சென்று பார்த்ததில், கல்லாவில் வைத்திருந்த, 5,000 ரூபாய் திருட்டு போயிருந்தது தெரிந்தது. இதுகுறித்து, அந்தியூர் போலீசார் தடயங்களை சேகரித்து, 'சிசிடிவி' கேமராவை ஆய்வு செய்து, மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.