sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கார் பட்டறை உரிமையாளரை தாக்கிய 6 பேர் கும்பல் கைது

கார் பட்டறை உரிமையாளரை தாக்கிய 6 பேர் கும்பல் கைது

கார் பட்டறை உரிமையாளரை தாக்கிய 6 பேர் கும்பல் கைது


ADDED : மார் 28, 2025 01:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 28, 2025 01:01 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

கார் பட்டறை உரிமையாளரை தாக்கிய 6 பேர் கும்பல் கைது

ஈரோடு:ஈரோடு, பெரியசேமூரை சேர்ந்தவர் தினேஷ்குமார், 29; இவருடைய சகோதரர் சிலம்பரசன். இருவரும் சேர்ந்து சூளை பகுதியில் கார் பட்டறை நடத்தி வருகின்றனர். கடந்த, 23ல் பட்டறை முன் இருவர் அமர்ந்து, மது போதையில் தகாத வார்த்தைகள் பேசி கொண்டிருந்தனர். இதை சகோதரர்கள் கண்டிக்கவே, ஆசாமிகள் இருவரும் சென்றுள்ளனர். சிறிது நேரத்தில் தங்களது கூட்டாளிகளை அழைத்து வந்தனர். ஆறு பேர் கும்பல் பட்டறைக்குள் புகுந்து, சகோதரர்களை சரமாரியாக தாக்கி விட்டு, கொலை மிரட்டல் விடுத்து சென்றனர். இதுகுறித்த புகாரின்படி வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரித்தனர்.

இதில், ஈரோடு, அசோகபுரம் பகுதி வெங்கடேசன், 25, அரவிந்தன், 20, வீரப்பன்சத்திரம் கொத்துக்காரர் தோட்டம் தமிழ்செல்வன், 30, ராஜேஷ், 25., சந்தோஷ், 20, சரத்குமார், 24, என தெரியவந்தது. ஆறு பேரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள்மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளதாக போலீசார்

தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us