/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாற்றுத் திறனாளிகள் 640 பேர் மீது வழக்கு
/
மாற்றுத் திறனாளிகள் 640 பேர் மீது வழக்கு
ADDED : ஜன 23, 2025 01:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாற்றுத் திறனாளிகள் 640 பேர் மீது வழக்கு
ஈரோடு,: தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் சார்பில், மாற்றுத்திறனாளிகள் உதவி தொகையை உயர்த்தி வழங்க கோரி நேற்று முன்தினம் ஈரோடு கலெக்டர் அலுவலகம் முன் மறியலில் ஈடுபட்டனர். ஈரோட்டில் அகில இந்திய செயல் தலைவர் நம்புராஜன் தலைமையில் 71, மொடக்குறிச்சியில் 59, பவானியில் 82, அந்தியூரில் 177, சத்தியில் 67, பவானிசாகரில் 95, தாளவாடியில் 54, பெருந்துறையில், 35 பேர் என, 640 பேர் மறியலில் ஈடுபட்டனர். இவர்கள் அனைவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், 640 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

