/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தாளவாடிமலையில் தீப்பிடித்து எரிந்த வேன்7 பேர் தப்பினர்; கொள்ளு செடியால் விபத்து

ADDED : ஜன 17, 2025 01:49 AM
தாளவாடிமலையில் தீப்பிடித்து எரிந்த வேன்7 பேர் தப்பினர்; கொள்ளு செடியால் விபத்து
சத்தியமங்கலம், :தாளவாடிமலையை அடுத்த தர்மாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் காளசாமி. இவரது உறவினர்கள் கர்நாடகா மாநிலம் பெங்களூரில் இருந்து பொங்கல் விடுமுறைக்காக வந்தனர்.
உறவினர்கள் ஏழு பேருடன், மாருதி ஈக்கோ வேனில் கர்நாடக மாநிலம் தொரக்கனாம்பி கிராமம் சென்றுவிட்டு மீண்டும் தர்மாபுரம் கிராமத்துக்கு நேற்று காலை வந்தனர். காளசாமி காரை ஓட்டினார். மெட்டல்வாடி அருகே விவசாயிகள் சாலையில் கொள்ளு செடிகளை உலர வைத்திருந்தவனர்.
அதன் மீது ஏறி சிறிது துாரம் சென்ற நிலையில், காரில் இருந்து திடீரென புகை வந்தது. இதனால் அனைவரும் உடனடியாக காரில் இருந்து இறங்கினர். சிறிது நேரத்தில் தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிந்ததால், கார் முழுவதும் சேதமானது.