தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஏலச்சீட்டு நடத்தி ரூ.7.47 லட்சம்மோசடி; ஈரோட்டில் பெண் கைது

ஏலச்சீட்டு நடத்தி ரூ.7.47 லட்சம்மோசடி; ஈரோட்டில் பெண் கைது

ஏலச்சீட்டு நடத்தி ரூ.7.47 லட்சம்மோசடி; ஈரோட்டில் பெண் கைது


ADDED : பிப் 13, 2025 01:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 13, 2025 01:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஏலச்சீட்டு நடத்தி ரூ.7.47 லட்சம்மோசடி; ஈரோட்டில் பெண் கைது

ஈரோடு:ஈரோடு பெரிய சேமூரை சேர்ந்தவர் பாலு, 48, இவர், கொங்கம்பாளையம் எல்.வி.பி.நகரை சேர்ந்த அழகர்சாமி, இவரது மகள் மாரியம்மாள் (எ) தனிகாஸ்ரீ, 26, ஆகியோர் நடத்திய ஏலச்சீட்டில், தன் நண்பர் குமாருடன் இணைந்து, 2019ல், 5.25 லட்ச ஏலச்சீட்டில் பங்கேற்றார். ஏலம் முடிவுற்ற பின்னரும் தொகை வழங்கப்படவில்லை.

பின்னர் பாலு, குமாருக்கு 2.13 லட்சத்துக்கு தலா ஒரு வங்கி காசோலையை அழகர்சாமி, மாரியம்மாள் தரப்பினர் வழங்கினர். இதில் குமாரின் காசோலைக்கு முழு தொகை கிடைத்தது. பாலு காசோலைக்கு வங்கி கணக்கில் பணம் இல்லை என்று திரும்பியது. அழகர்சாமி, அவரது மகளிடம் தொகையை பாலு தொடர்ந்து கேட்டபடி இருந்தார். இந்நிலையில், 2021ல் மீண்டும் ஒரு ஏலச்சீட்டை அழகர்சாமி, மாரியம்மாள் தரப்பினர் துவங்கினர். இந்த ஏலச்சீட்டு முடிந்தவுடன், ஏற்கனவே கொடுக்க வேண்டிய தொகையையும் கொடுப்பதாக அழகர்சாமி தரப்பினர் தெரிவித்தனர்.

இதனை நம்பி மீண்டும் பாலு, 5.25 லட்சத்தை செலுத்தினார். ஆனால் ஏலம் முடிந்தும் பணம் கொடுக்கவில்லை. இதனால் ஈரோடு எஸ்.பி., ஜவகரிடம் பாலு புகார் அளித்தார். இதையடுத்து, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி, பாலுவுக்கு மட்டும், ஏழு லட்சத்து, 47 ஆயிரத்து, 500 ரூபாய் கொடுக்க வேண்டி இருந்தது. வழக்குப்

பதிந்த இன்ஸ்பெக்டர் சங்கீதா, நேற்று முன்தினம் மாரியம்மாள் (எ) தனிகாஸ்ரீயை கைது செய்தார். நீதிமன்ற உத்தரவுப்படி மாரியம்மாள் திருப்பூரில் உள்ள மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார். அழகர்சாமியை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us